துறையூர்: துறையூரில் சத்யநாராயணப்பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி உற்சவ விழாவையொட்டி ஸ்வாமிக்கு ஒவ்வொரு நாளும் வெண்ணெய், சந்தனம், துளசி, காய்கறி என விதவிதமான அலங்காரம் நடைபெற்று வந்தது. இன்று பகலில் 1008 வடை மாலை சாத்தி சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்த விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதேபோல் திருச்சி ரோட்டிலுள்ள வீர ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு நடைபெறும் ஜெயந்தி விழாவில் மாலை அபிஷேக ஆராதனை, விஸ்வரூப தரிசனம், ஸ்வாமி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. துறையூர் வேணுகோபால ஸ்வாமி கோயில், பெருமாள்மலை அடிவாரம் ஸ்ரீபிரஸன்ன வெங்கடாஜலபதி கோவில் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. துறையூர் அருகே கீரம்பூர் ஸ்ரீபாலஆஞ்சநேய ஸ்வாமிக்கு காலை பஞ்சசூக்த ஹோமம், மஹா திருமஞ்சனம், தீபாராதனை, மதியம் அன்னதானம், மாலை வீதியுலா நடைபெறுகிறது. துறையூர் அருகே மருவத்தூர் பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பகளவாடி ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும்.