பாதூர் பெருமாள் கோவிலில் அகோபில மட ஜீயர்கள் வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2011 10:12
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் நடந்த சிறப்பு பூஜைகளில் அகோபில மடத்தின் ஜீயர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர மாநிலம் கர்னுல் மாவட்டம் அகோபிலம் சேஷாத்திரத்தில் கடந்த 1398ம் ஆண்டு நரசிம்மர் சுவாமி நேராக வந்து பிரம்மச்சாரியான சீனுவாச்சாரியாருக்கு பட்டம் வழங்கி சன்னியாசம் கொடுத்தார். அவருக்கு ஆதிவன்கோப ஜீயர் என பெயரிட்டு கிராமம் கிராமமாக விஜய யாத்திரை மேற்கொண்டு அரு ளாசி வழங்குமாறு கூறினார். அதன்பேரில் அகோபில மட ஜீயர் சுவாமிகள் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 45வது பட்டாச்சியரான நாராயண எதேந்திர மகாதேசிகன், 46வது பட்டாச்சியரான ரங்கநாத எதேந்திர மகாதேசிகன் ஆகியோர் கடந்த 20ம் தேதி சென்னையில் இருந்து விஜய யாத்திரையாக புறப்பட்டனர். உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்தனர். இக்கோவிலில் நடந்த தங்க கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம், லட்சுமிநரசிம்மர் ஊஞ்சல் உற்சவம் மற்றும் சிறப்பு பூஜைகளில் ஜீயர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுவாமி தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள் ஜீயர்களிடம் ஆசி பெற்றனர். பாதூரில் இருந்து நேற்று விஜய யாத்திரையாக திருவையாறு அடுத்த கல்யாண புரத்திற்கு ஜீயர்கள் புறப் பட்டு சென்றனர். அதனை தொடர்ந்து 26ம் தேதி ஸ்ரீரங்கத்திற்கு சென்று 2 மாதங்கள் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர்.