பதிவு செய்த நாள்
31
ஜன
2018
02:01
திருவாரூர்: சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இன்று சிறப்பு அபிேஷகம் நடைபெறுகிறது.குறிப்பிட்ட காலத்தில் சூரியன் அல்லது சந்திரன் மீது, நிழல் விழும்போது,சில மணி நேரம் அந்த நிழல்,ஒரு உபகிரகமாக தோன்றும்.அப்போது, அந்த கிரகத்தின் நிறம் மாறும்.இதுவே, கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பவுர்ணமியான இன்று, மாலை 6:32மணிக்கு, சந்திரன் மீது, நிழல் விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது; இரவு, 8:45 மணிவரை இது தொடரும்.கிரகண காலத்தில்,தமிழகத்தில் உள்ள கோவில்களின் நடை சாத்தப்படும்.ஆனால்,ஒரு சில கோயில்கள் மட்டுமே திறந்து இருக்கும்.குறிப்பாக, திருவாரூர் தியாகராஜர் கோவிலில்,சந்திர கிரகணமான இன்று, தியாகராஜருக்கு, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை அபிேஷகம் நடக்கின்றன. அத்துடன், சங்கு, ஸ்தபன அபிேஷகளும் நடக்கின்றன.கிரகணம் முடிந்தவுடன், தியாகராஜருக்கு சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கிரகணம் நடுராத்திரியில் வந்தாலும்,மதிய நேரத்தில் சூரிய கிரகணம் வந்தாலும்,நடைகள் திறந்து தியாகராஜருக்கு பூஜைகள் நடப்பதே,இக்கோயிலின் சிறப்பு அம்சம்