பதிவு செய்த நாள்
31
ஜன
2018
02:01
சூரமங்கலம்: சாய் சத்சங்கம் சார்பில், சேலம், அழகாபுரத்தில் உள்ள, தெய்வீகம் மண்டபத்தில், உலக நன்மை வேண்டி, சண்டி ஹோமம், நேற்று முன்தினம் துவங்கியது. மாலை, 4:30 முதல், இரவு, 8:30 மணி வரை, ஹோமம் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு பஜனை, சண்டி ஹோமம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன், சுப்ரமணியருக்கு கல்யாணம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இன்று, நாளை, சாய்பஜனை நடக்கிறது.