உடுமலை: உடுமலை, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், இருமுடி பெருவிழா நிறைவு பூஜை நடந்தது.ஆண்டுதோறும், தைமாதத்தில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், இருமுடி பெருவிழா நடக்கிறது. உடுமலை, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இவ்விழா நடந்தது. இருமுடி பெருவிழா நிறைவு பூஜை நேற்றுமுன்தினம், வழிபாட்டு மன்றத்தில் இடம்பெற்றது. அறுகோண சக்கர விளக்கு பூஜையுடன் விழா நிறைவடைந்தது. பக்தர்கள், மன்ற நிர்வாகத்தினர் பூஜையில் பங்கேற்றனர்.