புதுச்சேரி : நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி உற்சவம் இன்று நடக்கிறது ஏம்பலம் அடுத்த நல்லாத்தூரில் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, அனுமன் ஜெயந்தி உற்சவம் இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்கார தீபாராதனையும், 11.30 மணிக்கு வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. உற்சவ ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் சம்பங்கி செய்துள்ளார்.