பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
திருப்போரூர்: கந்தசுவாமி கோவில் தைப்பூச தெப்போற்சவம், இன்று நடைபெறுகிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டு தோறும், தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இரவு தெப்போற்சவமும் நடக்கும். ஆனால், நேற்றைய தினத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டதால், கோவில் நடை மதியம், 2:30 மணிக்கு அடைக்கப்பட்டது. இதனால், இன்று இரவு, 7:30 மணிக்கு, தைப்பூச தெப்போற்சவம் நடைபெறுகிறது. சரவணப்பொய்கை குளத்தில் அலங்கரிங்கப்பட்டுள்ள தெப்பத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளுவார். குளத்தில், மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின், மாடவீதிகளில் சுவாமியின் வீதியுலாவும் நடைபெறும்.