பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
கொடுமுடி: கொடுமுடி தாலுகா, புஞ்சை கொளாநல்லி ஊராட்சி, பெரியூர் கிராமத்தில் குயவன் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. தை உற்சவத்தை முன்னிட்டு, நடப்பாண்டு பிப்.,7ல் மாலையில், கோவிலில் இருந்து ஆயுதங்கள், காவிரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு சுத்தம் செய்து, பூஜை செய்யப்படும். பின், பால்குடம், தீர்த்தக்குடம் ஊர்வலத்துடன், கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். உற்சவத்தின் முக்கிய விழா, பிப்.,8ல் காலை, 6:00 மணிக்கு கருப்பணசாமிக்கு அபிஷேகம், பொங்கல் வைபவம் நடக்கிறது. அன்று காலை, கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்காரம், படையலிட்டு, பச்சை பூஜை நிகழ்வு, பெரும் பூஜை நடக்கும்.