பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
திருக்கனுார்: செட்டிப்பட்டு முருகன் கோவிலில், தைப்பூச பால் காவடி விழா நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டில் உள்ள வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில், 46ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நடந்தது. இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்கினி சட்டி எடுத்தல், ஆகாய மாலை அணிவித்து செடல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் செடல் அணிவித்து, வாகனங்களை இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர். செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, தமிழகப்பகுதியான புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தைப்பூச விழா நடந்தது.