செஞ்சி: செத்தவரை மோன சித்தர் குருபீட ஆஸ்ரம சொக்கநாதர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா செத்தவரை--நல்லாண்பிள்ளை பெற்றாள் மோன சித்தர் குருபீட ஆஸ்ரமத்தில் உள்ள மீனாட்சியம்மன் உடனுரை சொக்கநாதர் கோவிலில், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மீனாட்சியம்மன் உடனாகிய சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 10:30 மணிக்கு சிவ ஜோதி மோன சித்தர் தலைமையில் கலச பிரதிஷ்டை செய்து விசேஷ வேள்வி நடந்தது. பகல் 12:00 மணிக்கு கலசாபிஷேகமும், சொக்கநாதர் மற்றும் மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்தனர். மதியம் 1:00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது. ஓதுவார்களின் சிறப்பு வழிபாடும், பக்தர்களுக்கு சிவ ஜோதி மோன சித்தரின் அருளாசி நிகழ்ச்சியும் நடந்தது.