திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2018 02:02
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் ஐந்து நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண மகோற்சவம் ஜன.,29 மாலை துவங்கியது.தொடர்ந்து இரண்டாம் நாள் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளி, தாயாருக்கு சாத்தப்படும் தைலம் பல்லக்கில் திருவீதி வலம்வந்தார். பின்னர் நவகலஸ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3ம் நாளில் உச்சிக்கொண்டை சேவை அலங்காரத்தில் ஆண்டாள் மணவாளமாமுனிகள் கைத்தடியில் எழுந்தருளினார். நான்காம் நாள் ஆண்டாள் முத்துக்குறி பார்த்தல் நடந்தது. நேற்று மாலை 4:20 மணிக்கு ஆண்டாள் பெண் அழைத்தல் அங்குமணி திருவீதி உலாவுடன் துவங்கியது.
தொடர்ந்து பெருமாள், ஆண்டாள் ராஜகோபுரம் முன் மாலை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து ஊஞ்சல், தேவஸ்தானம் சார்பில் மாப்பிள்ளை பிடி, மரியாதை செலுத்தி வரவேற்பு செலுத்தப்பட்டது. பின்னர் ஆண்டாளும்,பெருமாளும் ஏகாதசி மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். பின்னர் இரவு 7:40 மணிக்கு மங்கல வாத்தியம் முழங்க மேளதாளம் ஒலிக்க பக்தர்கள் கரகோஷத்துடன் பெரியாழ்வார் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்தனர்.