பதிவு செய்த நாள்
03
பிப்
2018
01:02
ஈரோடு: ஈரோடு, கோட்டை பெருமாள் கோவிலில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மராமத்துப் பணி நடக்கிறது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியது: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 10 ஆண்டுகளாகிறது. வரும், 2019ல் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இக்கோவிலின் வகையறா கோவிலான, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 2020ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையொட்டி கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், திருப்பணி செய்ய விரும்புவோர் மூலம், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணி நடந்தது. தற்போது, வெளி பிரகாரத்தை சுற்றிலும், கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இப்பணி, 30 லட்சம் ரூபாயில் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதுபோல, பிற பணிகளும் திருப்பணிதாரர்கள் மூலம் செயல்படுத்தப்படும். அதற்குள், அரசு அனுமதி, நிதி ஒதுக்கீடு கிடைத்தால், திட்டமிட்டபடி, 2019ல் கும்பாபி?ஷகம் நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.