பழநி கோயிலில் தரிசனத்திற்கு பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2011 10:12
பழநி : பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக 4 மணி நேரம் காத்திருந்தனர். விடுமுறை மற்றும் ஐயப்ப சீசனால் பழநி கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகளவில் காணப்பட்டது. மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜையால் அதிகாலை 4 மணிக்கு மலைகோயில் சன்னதி திறக்கப்பட்டது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் பழநி முருகனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலைகோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆனது. ரோப்கார், வின்சில் மலைகோயிலுக்கு செல்ல 3 மணி நேரம் காத்திருந்தனர். அடிவாரம் பூங்காரோடு, அருட்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதி ஆகியவை ஆக்கிரமிப்பால் குறுகிய நிலையில், இரு புறமும் கார், பஸ், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.