பதிவு செய்த நாள்
08
பிப்
2018
01:02
அரூர்: கடத்தூர் போலீஸ் குடியிருப்பில், இடிக்கப்பட்ட அம்மன் கோவிலை மீண்டும் கட்டித் தர வேண்டும் என, ஆர்.டி.ஓ., கவிதாவிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது: கடத்தூர் போலீஸ் குடியிருப்பில் அம்மன் கோவில் உள்ளது. இதை, அப்பகுதியில் உள்ள மக்கள், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வந்தனர். கடந்த, 24ல், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, கோவில் மற்றும் அதிலிருந்த சுவாமி சிலைகள், அங்கிருந்த மரங்கள் ஆகிய வற்றை, போலீசார் இடித்து அகற்றினர். இதனால், அப்பகுதி மக்களின் மனம் மிகவும் புண்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே இருந்த இடத்தில், மீண்டும் அம்மன் கோவிலை கட்டித் தருவதுடன், சுவாமியை வழிபட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.