வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மஹாசிவராத்திரி இசை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2018 02:02
கோவை : வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி முன்னிட்டு இன்னிசை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சத்குரு முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு நாளை துவங்கி பிப்., 12ம் தேதி வரை இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பிரபல கலைஞர்களின் இசைக் கச்சேரிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. பண்டிட் ஹரிப்ரசாத் சவுராசியாவின் சீடரான ராகேஷ் சவுராசியாவின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி முதல் நாள் நடைபெற உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். நிகழ்ச்சியின் நிறைவில் அன்னதானம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 89038 16461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.