உத்தரகோசமங்கை வாராகி அம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2018 11:02
கீழக்கரை: உத்தரகோசமங்கை வாராகி அம்மன் கோயிலில் தைமாத நிறைவு வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு மஞ்சள் நீராட்டுவிழா நடந்தது. பகலில் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 3:00 மணியளவில் கோயிலில் இருந்து 108 மஞ்சள் நீரை கலசங்களில் சுமந்தபடி பெண்கள் சக்தி கோஷம் முழங்க, உத்தரகோசமங்கையின் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்தனர். சுமந்து வந்த மஞ்சள் நீரால் மூலவர், உற்ஸவர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட அம்மிக்கல்லில், பெண்கள் பச்சை விரலிமஞ்சளை அரைத்து, அம்மனுக்கு பூசி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் ஸ்ரீதர் மற்றும் பவுர்ணமி விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.