Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொலிவு பெறுமா அம்பாளீஸ்வரர் கோவில்? கோவில்களில் தீ: கோலமிட்டு பெண்கள் வழிபாடு கோவில்களில் தீ: கோலமிட்டு பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் கோயில் முன் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
மடப்புரம் கோயில் முன் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
12:02

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் முன் பெருகி வரும் ஆக்கிரமிப்பால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு வாரம் தோறும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படும், கேட்ட வரம் தருபவள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவது உண்டு. கோயிலுக்கு முன் தேங்காய், பழம், சூடம், கூல்டிரிங்ஸ், எலுமிச்சை மாலை விற்பனை செய்யும் 30க்கும் மேற்பட்ட கடைகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பாதையில் நடந்து கூட செல்ல முடியவில்லை. கோயில் முன் ரோட்டை ஆக்கிரமித்து பூஜை பொருட்களை விற்பனை செய்வதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

ரோட்டை ஒட்டி 50க்கும் மேற்பட்டோர் சாலையை ஆக்ரமித்துள்ளதால் பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாவதுடன் விபத்துகளும் நேரிட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டி உள்ளது. பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் ரோட்டோரம் நிறுத்தி விட்டு நடந்து செல்லவேண்டி உள்ளது. கோயிலுக்கு முன் அரசு பொது இடத்தை ஆக்கிரமித்து கடையை அமைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில் அடிப்படை வசதி எதுவும் இல்லை. பெண் பக்தர்களுக்கு சரியான கழிப்பிட வசதியில்லாததால் வைகை ஆற்றினுள் மறைவில் செல்ல வேண்டியுள்ளது. சமூக விரோதிகள் அப்பகுதியில் பதுங்கியிருந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கோயில் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar