Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)குடும்பத்தில் மகிழ்ச்சி மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பாராத வருமானம்
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பாராத வருமானம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
11:02

துடிப்புடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் 10-ம் இடத்திற்கு வருவதால் நன்மை பன்மடங்கு அதிகரிக்கும்.  புதன் பிப்.27-ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சுக்கிரனால் மார்ச் 3-க்கு பிறகு வருமானம் கூடும்.  ராகு மாதம் முழுவதும் நன்மையை வாரி வழங்குவார்.   நினைத்தது  நிறைவேறும்.  குருபகவான் பிப்.14ல் அதிசாரம் பெற்று 7-ம் இடத்திற்கு செல்வது உயர்வான அமைப் பாகும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.  சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும்.  ஆடம்பர வசதி பெருகும். குருவின் 5-ம் இடத்து பார்வையால் பொருளா தார வளம் மேம்படும். பணியாளர்களுக்கு புதிய பதவி கிடைக்கும்.

குடும்பத்தில் புதனால் மதிப்பு சிறப்பாக இருக்கும். பெண்களால் அனுகூலம் காணலாம். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன்-, மனைவி இடையே அன்பு பெருகும். குருவால் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும்.  பிப்.18,19,20- ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மார்ச் 1,2ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம் கவனம்.  செவ்வாயால் வீண்அலைச்சல் அவ்வப்போது உண்டாகும். மனைவி வகையில் தொல்லை வரலாம். அண்டை வீட்டாரால் பிரச்னை உருவாகலாம். உடல்நிலை திருப்தியளிக்கும்.

தொழில், வியாபாரத்தில் ராகுவால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.  கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். மார்ச் 6,7-ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். பிப். 21,22,25,26-ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். பிப்.26-க்கு பிறகு தொழிலில் போட்டி மறையும்.  பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். பணியிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.  சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  தனியார் துறையில் வேலை பார்ப்ப வர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.  அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.

விண்ணப்பித்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். பிப்.16,17- ல் எதிர்பாராத நன்மை கிடைக்க பெறுவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும்.  கலைஞர்களுக்கு எதிரி தொல்லை அதிகரிக்கும். சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம். மார்ச் 3-க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.   உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைப்பதில் தடை உண்டா கலாம். அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி பெற முடியாது.
ஆனாலும் பணியில் திருப்தி உண்டாகும். மார்ச்3,4,5- ல் மனக்குழப்பத்திற்கு ஆளாகலாம் கவனம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் முயற்சிக்கு தகுந்த முன்னே ற்றம் காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.  குருபகவானால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.   விவசாயிகள் பழ வகைகள், பயறு வகைகள்,  மஞ்சள் போன்ற பயிர்கள் மூலம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர்.   புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு, விவகாரத்தில் திருப்திகரமான முடிவு கிடைக்கும்.  

பெண்கள் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்க பெறுவர்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.   அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  பிப். 27,28-ல் இனிய அனுபவம் உண்டாகும்.  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். பிப்.23,24ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  மார்ச் 3க்கு பிறகு
சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

நல்ல நாள்: பிப்.16, 17, 18, 19, 20, 23, 24, 27, 28, மார்ச் 6, 7, 8, 9
கவன நாள்: மார்ச் 10, 11, 12-  சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1, 7, 9  நிறம்: பச்சை, சிவப்பு

* பரிகாரம்:
* வெள்ளி ராகுகாலத்தில் துர்க்கைக்கு விளக்கு
* சஷ்டியன்று முருகப்பெருமானுக்கு அர்ச்சனை
* பவுர்ணமியன்று மாலை அம்பிகை வழிபாடு

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar