Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பாராத வருமானம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்): கையில் பணம் புழங்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்): கையில் பணம் புழங்கும்

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
11:02

நல்ல மனம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!

புதன் பிப்.27- வரையிலும், சுக்கிரன் மார்ச் 3- வரையிலும் சாதகமான நிலையில் உள்ளனர்.   சூரியன் மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவார். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணியில் உங்களின் ஆற்றல் மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.  குருபகவான் பிப். 14-ல் அதிசாரம் பெற்று 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சிறப்பானதல்ல.  அவரால் மன வேதனையும், நிலையற்ற தன்மையும் உண்டாகும்.  வீண் விரோதம் ஏற்படலாம்.  இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வையால் இடையூறை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

குடும்பத்தில் சுக்கிரனால் பண வரவு அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு  போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதுமண தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். பிப். 21,22- ல் சகோதர வழியில் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வர வாய்ப்புண்டு.  பிப்.16,17- ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மை கிடைக்கும். அதே நேரம்  பிப். 27,28ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே சற்று விலகி இருக்கவும். செவ்வாயால் இருந்த உஷ்ண, பித்த, மயக்கம், சளி போன்ற உபாதைகள்  மார்ச்10-க்கு பிறகு மறையும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரித்த வண்ணம் இருக்கும். வங்கி கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்தலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிப்.18,19,20,23,24-ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.  மார்ச் 3,4,5-ல் திடீர் வருமானம் கிடைக்கும்.   பிப்.27க்கு பிறகு எதிரிகளால் தொல்லை வரலாம். உங்கள் முயற்சிகளில் தோல்வியை சந்திக்கும் நிலை உருவாகலாம்.

பணியாளர்கள் புதனின் பலத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்க பெறுவர். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.  பிப்.13,14,15, மார்ச்13,14- ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். பிப். 27க்கு பிறகு தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  பொறுமையும் நிதானமும் தேவை.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பர். மாத பிற்
பகுதியில் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் சுமாரான பலனை காண்பர். மாணவர்கள்  புதனால், கல்வியில் சிறந்து விளங்குவர்.  ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். பிப். 27-க்கு பிறகு  சிரத்தை எடுத்து படித்தால் தான், பலன் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நெல், கோதுமை, சோளம், போன்ற பயிர்கள் நல்ல மகசூல் தரும். மாத முற்பகுதியில் காய்கறி மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.  வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.  பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணிக்கு செல்லும் பெண்கள் சிறப்பான முன் னேற்றம் காண்பர்.  புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பிப். 25,26- ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம்.

நல்ல நாள்:  பிப்.13, 14, 15, 16, 17, 21, 22, 25, 26,  மார்ச் 3, 4, 5, 6, 7, 13, 14
கவன நாள்: மார்ச் 8, 9- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண் : 1, 9    நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகன் வழிபாடு
* ராகு காலத்தில் கால பைரவருக்கு அபிேஷகம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar