Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பதவி உயர்வு கிடைக்கும் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பிள்ளைகளால் பெருமை

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
11:02

சிங்கம் போல வெற்றி நடை போடும் சிம்ம ராசி அன்பர்களே!

மாதம் முழுவதும் கேது நற்பலன் கொடுப்பார்.  புதன் பிப். 26- க்கு பிறகும், சுக்கிரன் மார்ச் 2- க்கு பிறகும் நன்மை தருவர். கேதுவால் பொருளாதார வளம் இருக்கும்.  எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். குருபகவான் பிப்.14ல் அதிசாரம் பெற்று 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார்.  இதனால் மன உளைச்சல்,  உறவினர் வகையில் வீண்பகை
உண்டாகலாம்.

குடும்பத்தில் புதனால் இருந்த குழப்பம், வேதனை முதலியன பிப். 26-க்கு பிறகு மறையும். அதன் பிறகு கணவன்-, மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.  மார்ச் 2-க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள்  ஆதரவுடன் செயல்படுவர். பிப்.25,26-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மார்ச் 8,9-ல் அவர்களின்  வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.  மார்ச் 1,2- ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். சூரியனால் அவ்வப்போது வீண் அலைச்சல் ஏற்படலாம்.  செவ்வாயால் பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் முறியடிப்பீர்கள்.  பிப். 26- க்கு பிறகு பணப்புழக்கம் சிறப்பாகவே இருக்கும்.  சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.  தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.  பெண்கள் வகையில் இருந்த பிரச்னை மார்ச் 2- க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள்  தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.  பிப்.27,28, மார்ச் 3,4,5ல் முயற்சிகளில் தடை வரலாம். பிப்.13,14,15, மார்ச்13,14-ல் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.  செவ்வாயால் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கிய வர்கள் அவர்கள் பிடியில் இருந்து மார்ச் 9-க்கு பிறகு விடுபடுவர்.

பணியாளர்கள் மாத தொடக்கத்தில் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். பிப். 26- க்கு பிறகு விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். சிலர் பதவி உயர்வு  கிடைக்க பெறுவர்.  மார்ச் 3-க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பிப். 23,24-  நன்மை தரும் நாட்களாக அமையும்.  சிலருக்கு ராகுவால் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம்.  

கலைஞர்கள் சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  மார்ச் 2-க்கு பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  மார்ச் 10,11,12 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள்  புதனின் அனுகூலத்தால்  பிப்.26-க்கு பிறகு கல்வி வளர்ச்சி காண்பர்.  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.  விவசாயிகளுக்கு பழ வகைகள், பயறு வகைகள், எள், கரும்பு போன்றவற்றின் மூலம் வருமானம் அதிகரிக்கும்.  வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். பிப்.16,17-  சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.  மார்ச் 6,7-ல்  ஆடம்பர பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு.  தாய் வீட்டில் இருந்து சீதனமாக பொருள் கிடைக்கப் பெறலாம். மார்ச் 3-க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

நல்ல நாள்: பிப்.13, 14, 15, 16, 17, 23, 24, 25, 26,  மார்ச் 1, 2, 6, 7, 13, 14
கவன நாள்:  பிப். 18, 19, 20- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
* கார்த்திகையன்று முருகனுக்கு அபிேஷகம்
* வெள்ளியன்று சுக்கிரனுக்கு நெய் தீபம்
* சனியன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar