Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வளர்ச்சிக்கான மாதம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பதவி உயர்வு கிடைக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பதவி உயர்வு கிடைக்கும்

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
11:02

குறையில்லாத மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!  

செவ்வாய் மார்ச் 10- வரை செவ்வாய் நன்மையை வாரி வழங்குவார்.  புதனால் பிப். 27- வரையும், சூரியன், ராகுவால் மாதம் முழுவதும் அனுகூல பலன் உண்டாகும்.  ஆலய, மகான் தரிசனம் என தினமும் தெய்வ அனுகூலம்  தொடர்ந்து கிடைக்கும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டை விலகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவுடன் செயல்படுவர்.  ராகுவால் பொன், பொருள் சேரும்.   பெண்கள் வாழ்வில் உறுதுணையாக செயல்படுவர்.  

குருபகவான் பிப். 14-ல் அதிசாரம் பெற்று விருச்சிக ராசிக்கு செல்கிறார்.  இது சாதகமற்ற நிலை என்றாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  புதிய வீடு,- மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.  திருமணம், வளைகாப்பு சுபநிகழ்ச்சி தடையின்றி நடந்தேறும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பிப். 26-க்கு பிறகு கணவன்,- மனைவி இடையே  பிரச்னை உருவாகி மறையும். இதற்கு காரணம் புதன் 5-ம் இடத்தில் இருப்பதே.   பிப். 27,28ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் மார்ச் 10,11,12ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். உடல்நலம் மேம்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. மார்ச் 9-க்கு பிறகு பயணத்தின் போது கவனம் தேவை.  

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானத்தை காணலாம். பெண்களை பங்கு தாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும்.  மார்ச்1,2,6,7ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். பிப்.16,17ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மார்ச்9- க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். அறிமுகமில் லாதவரிடம் விழிப்புடன் பழகவும்.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  விரும்பியபடி பதவி உயர்வு கிடைக்கும்.  விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும்.  பிப்.26-க்கு பிறகு பிறரை நம்பி பணம், முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.  சிரத்தை எடுத்து பணியாற்றுவது அவசியம். பிப்.25,26-ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

கலைஞர்கள் சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மார்ச்2- க்கு பிறகு மறையும். தொழில்ரீதியாக சிலர் வெளியூர், வெளிநாடு சென்று தங்க நேரிடலாம். அரசியல்வாதிகள், பொது நலசேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறுவர்.   பிப்ரவரி 13,14,15 மார்ச் 13,14-ல் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு கூடும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு, பாராட்டு பெறுவர்.  பிப்.26-க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  குரு பார்வை பக்க பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகள் விளைபொருளை அதிக விலைக்கு விற்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய சொத்து மார்ச் 9-க்குள் வாங்கலாம்.

பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  குருவின் பார்வையால் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும்.  மார்ச்  8,9-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிப்.18,19,20- ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  பிப்.26க்கு பிறகு கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

நல்ல நாள்: பிப்.16, 17, 18, 19, 20, 25, 26, 27, 28, மார்ச் 3, 4, 5, 8, 9, 10, 11, 12
கவன நாள்: பிப்.21,22-  சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9; நிறம்:  நீலம், சிவப்பு

* பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
* வெள்ளியன்று துர்க்கை நெய் விளக்கு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar