குன்னூர் : குன்னூர் ஐயப்பன் கோவிலில் நேற்று மண்டல பூøஐ துவங்கியது.குன்னூர் ஐயப்பன் கோவிலில் 45வது மண்டல பூஜை விழா நேற்று துவங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை நடத்தப்பட்டன; காலை 10.00 மணிக்கு கொடியேற்ற உற்சவம் நடத்தப்பட்டது. மதியம் 12.15 மணிக்கு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. மாலை 7.00 மணிக்கு அனைத்து ஐயப்ப பஜனை குழுவினரால் நடத்தப்பட்ட பஜனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜை, மங்கள ஆரத்தி மற்றும் பிரசாத வினியோகம் நடத்தப்பட்டன. இன்று காலை 8.45 மணிக்கு குன்னூர் வி.பி., தெரு துர்கையம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக தீர்த்தக்குடம், அபிஷேக பொருட்கள் ஏந்தி, சரண கோஷம் எழுப்பியவாறு ஐயப்பன் கோவிலை வந்தடைந்து சிறப்பு அபிஷேகம் நடத்தவுள்ளனர். மதியம் 3.00 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. மாலை 7.00 மணிக்கு புஷ்பாஞ்சலி, இரவு 8.00 மணிக்கு ராக்கால பூஜை, மங்கள ஆரத்தி மற்றும் பிரசாத வினியோகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.