பரமக்குடி : கேரளாவின் ஆரியங்காவில் நடந்து ஐயப்பன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை அடுத்து தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தர்ம சாஸ்தா கோயிலில் ஐயப்பன்- புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நிச்சயதார்த்தம், நேற்று காலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றல் ஆகிய வைபவங்களுக்கு பிறகு 10 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மதியம் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு திருவீதி உலாவும் நடந்தது. சுந்தரராஜப் பெருமாள் கோயில் டிரஸ்டிகள், தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள், தர்மியா, உமாயி, நம்பி உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.