பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
கூவத்துார்: கூவத்துார் அங்காளம்மன் கோவிலில், மயான கொள்ளை பிரம்மோற்சவம், இன்று துவங்குகிறது. தமிழக அறநிலையத் துறையின், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில், கூவத்துார் அங்காளம்மன் கோவில் உள்ளது. பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. கோவிலின் முக்கிய உற்சவமான, மயான கொள்ளை பிரம்மோற்சவம், இன்று இரவு, 7:00 மணிக்கு, கிராம தேவதை செல்லியம்மன் வழிபாடுடன் துவங்குகிறது.நாளை காலை, கானத்துார் அங்காளம்மன்குப்பம் கடற்கரை பகுதியில் அம்மன் எழுந்தருளி, கடலாடி உற்சவம் காண்கிறார். இரவு, கூவத்துார் கோவிலில் கொடியேற்றப்பட்டு, நாளை மறுநாள் மாலை, மயான கொள்ளை நடக்கிறது. தொடர்ந்து, 20ம் தேதி மாலை, தேர் உற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள், 23ம் தேதி வரை, தினமும் நடக்கிறது.