குன்னுார்:குன்னுாரில் உள்ள கோவில்களில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குன்னுார் வி.பி., தெருவில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆகியவை நடந்தன. விநாயகர் கோவிலில் சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. எடப்பள்ளி சித்தகிரி சாய்பாபா கோவிலில் காலை முதல் நடந்த சிறப்பு பூஜைகளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்தனர்.*ஜெகதளா, சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஆராதனை, பஜனை ஆகியவை இடம் பெற்றன. பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில், மவுன்ட் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலம் நடத்தப்பட்டது. வெலிங்டன் பேரக்ஸ் சுப்ரமணிய சுவாமி கோவில்கள், அருவங்காடு விநாயகர் கோவில் உட்பட பெரும்பாலான கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.