பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, மாசி மாத அமாவாசைக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு மாதம் தோறும் நடக்கிறது. மாசி மாத அமாவாசை வழிபாட்டையொட்டி, இன்று சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடக்கிறது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அமாவாசை வழிபாட்டுக்கு, பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.இன்று அமாவாசை என்பதால், மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக, 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று இரவு, 8:00 மணி முதல், விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.சிவராத்திரியையொட்டிய அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப, பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.