பதிவு செய்த நாள்
16
பிப்
2018
11:02
சூலுார் : முத்துக்கவுண்டன்புதுார் அரியபிராட்டி அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன்புதுாரில் அமைந்துள்ளது, அரியபிராட்டி அங்காளம்மன் கோவில். மு.க.புதுார், காளியாபுரம், ராசிபாளையம், அருகம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சொந்தமான இக்கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது.தேர்த்திருவிழா, கடந்த, 13ம் தேதி இரவு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை துவங்கியது. பள்ளைய பூஜை, குண்டத்துக்கு பூ போட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவில் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி வலம் வந்தது.