பந்தலுார் முருகன் கோவிலில் சிறப்பு கிராமசாந்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2018 11:02
பந்தலுார் : பந்தலுார் முருகன் கோவில் புனரமைப்பு மற்றும் பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு கிராமசாந்தி பூஜை நடத்தப்பட்டது.பந்தலுார் முருகன் கோவில் பழமையான கட்டடத்தில் அமைந்துள்ளதால், அதனை மாற்றி புதிதாக கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பொருட்களை பக்தர்களிடமிருந்து சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆலய புனரமைப்பு மற்றும் பொது ஜன நலன் வேண்டியும், புனரமைப்பு பணியில் உள்ள தடைகள் நீங்கிடவும், சிறப்பு கிராமசாந்தி, கணபதி ஹோமம், ஊர்சாந்தி மற்றும் அஷ்டதிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.அதிகாலை, 4:00மணிக்கு துவங்கிய பூஜையை குருக்கள் ரமேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன், செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சிவராஜ் தலைமையிலான கமிட்டியினரும், ஊர் மக்களும் பங்கேற்றனர்.