பதிவு செய்த நாள்
16
பிப்
2018
11:02
மாமல்லபுரம்: பாரம்பரிய சிற்பக்கலைகளை ரசிக்கும், சர்வதேச சுற்றுலாப் பயணியர், கோவில் இறைவழிபாட்டிலும் ஆர்வம் காட்டுகின்றனர். மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சிற்பக்கலைகள் இடமாக விளங்குகிறது. இவ்வூர், பல்லவர்கால சிற்பக்கலை சின்னங்களை காண, உள்நாடு, சர்வதேச பயணியர் சுற்றுலா வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, இவ்வூர், ஸ்தலசயன பெருமாள் கோவில், வைணவ, 108 கோவில்களில், 63ம் கோவிலாக அமைந்து, ஆன்மிக இடமாகவும் சிறப்பு பெற்றது. சுற்றுலா வரும் சர்வதேச பயணியர், கோவில்களில் ஆர்வத்துடன் வழிபடுகின்றனர். சைவ, வைணவ கோவில்களையும், இறைவழிபாட்டையும் அறிய விரும்புகின்றனர். வழிகாட்டிகள் மூலம், ஸ்தலசயன பெருமாள், மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு சென்று, பாரம்பரியம், வழிபாடு சிறப்பை உணர்ந்து வியக்கின்றனர்.