பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
மீனாட்சி அம்மன் கோயிலில் மடப்பள்ளி, நவக்கிரக சன்னதி, பழைய திருக்கல்யாண மண்டபம் போன்ற முக்கிய இடங்களில் தண்ணீர் குழாய்கள் இருக்க வேண்டும். தீ விபத்து போன்ற சம்பவம் சின்னதாய் ஆரம்பிக்கும் போதே இந்த குழாய்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுக்கலாம். கோயில் நடை மூடிய பின் இயங்கும் வகையில் புகை மற்றும் வெப்பம் கண்டறியும் கருவியை பொருத்த வேண்டும். புகை, வெப்பம் அதிகரிக்கும் போது அலாரம் அடிக்கும் வகையில் இருக்க வேண்டியது அவசியம்.- ஜி.சங்கர நாராயணன், மதுரை.
கோயிலில் புட்டு லட்டு பிரசாதம்மீனாட்சி அம்மன் சன்னதி இரண்டாவது பிரகாரத்தில் தர்ம தரிசனத்திற்காக தடுப்புகள் வைத்து இருப்பதால், பிரகாரத்தை முழுமையாக சுற்றிவர முடியவில்லை. திருப்பதி தேவஸ்தானம் போல உயர்மட்ட நடைபாதை அமைத்தால் பிரகாரத்தை சுற்றிவர வசதியாக இருக்கும். சில கோயில்களின் அடையாளமே பிரசாதம் தான். அந்த ஈசனே புட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு மதுரையில் நடந்ததால் கோயிலில் புட்டு பிரசாதம் வழங்கலாம். புட்டை உதிரியாக கொடுக்காமல் நெய், முந்திரி, உலர் திராட்சை, பச்சை கற்பூரம், நாட்டுச் சர்க்கரை, கல்கண்டு சேர்த்து உருண்டையாக்கி புட்டு லட்டு என்ற பெயரில் கொடுக்கலாம். இது திருப்பதி லட்டு போல பக்தர்கள் மத்தியில் பிரபலமாகும். கோயில், நிர்வாகமும், அறநிலையத்துறையும் இதை எல்லாம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.- ஆர்.நாகராஜ், மதுரை.
மதுரை மீனாட்சி கோயில் நமது பொக்கிஷம். இக்கோயிலை இயற்கை சீற்றம், விபத்துக்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காப்பது நம் கடமை. மீனாட்சி கோயிலின் பழம்பெருமை, புராதனம் காக்க விரும்பும் வாசகர்கள், பல்துறை வல்லுனர்கள் அதற்கான ஆலோசனைகளை மீனாட்சி கோயிலை காப்போம், தினமலர்,டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை - 625 016என்ற முகவரிக்கு தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம்.
mdureporting@dinamalar.in