பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில்மாசிமகத் தேரோட்டம் மார்ச் 1ல் நடக்கிறது.இதற்கான கொடியேற்றம், காப்பு கட்டுதல் மற்றும் மண்டகப்படிபிப். 18 ல் துவங்குகிறது.தொடர்ந்து 10 நாட்கள் காலை, மாலை என பல்வேறு சமூகத்தினர்மண்டகப்படி நடத்துகின்றனர். பிப். 28 ல் சுவாமி அம்மன் திருக்கல்யாணம்நடக்கிறது.மார்ச் 1 அதிகாலை சுவாமிஅம்பாள் ரதம் ஏறுதல் நடைபெறும். தொடர்ந்து காலை 10:30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
பேச்சுவார்த்தை: தேரோட்டத்தை ஒட்டி உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோட்டாட்சியர் சென்னியப்பன் தலைமை வகித்தார். செயல்அலுவலர்செந்தில்குமார், தக்கார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., சீமைச்சாமிதாசில்தார் பாலசண்முகம் , அதிகாரிகள், இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள், அனைத்து சமுதாய சங்கம் மற்றும் இந்துஆன்மிக நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானம்: பிரச்னைக்குரிய இடங்கள், பொதுமக்கள்கூடும் இடங்கள், குறிப்பாகமசூதிகளில் தொழுகை நடக்கும் போது பட்டாசு வெடிக்க கூடாதுஎன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிளக்ஸ் பேனர் உரியஅனுமதி பெற்று, தங்களின் சொந்த பாதுகாப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆட்சேபகரமான வாசகங்கள் இடம்பெறக் கூடாதுஎன முடிவெடுக்கப்பட்டது. தேரோட்டம் நாளை உள்ளூர் விடுமுறையாகஅறிவிக்கவும், தேரோட்டம் முழுவதையும் கண்காணிப்பு காமிரா மூலம் பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.