திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் பூத்தேர் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி நடந்தது. நேற்று அம்மன் பூத்தேரில் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தார். வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் பூத்தேரில் வந்த அம்மனுக்கு கூடை கடையாக பூக்களை அளித்து பூஜை செய்தனர்.பிப்.,20ம் தேதி கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து பால்குடம், தீச்சட்டி ஊர்வலம், தினமும் சிறப்பு அலங்காரம், வீதியுலா நடைபெறும்.பூத்தேர் பவனியின் போது திரண்ட கூட்டத்தில் ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி 3 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டது.