பதிவு செய்த நாள்
17
பிப்
2018
11:02
சபரிமலை: சபரிமலை மற்றும் பம்பையில், தேவசம் போர்டுக்கு சொந்தமான நிலத்தை அளந்து, எல்லை நிர்ணயம் செய்யும் பணி, வரும், 19ம் தேதி துவங்குகிறது.சபரிமலையில், வனபூமி தொடர்பாக, தேவசம் போர்டுக்கும், வனத்துறைக்கும் இடையே, பிரச்னை இருந்து வருகிறது.
தேவசம் போர்டின் பல திட்டங்களுக்கும், வனத்துறை தடையாக இருக்கிறது.பம்பையிலும், சபரிமலையிலும், 77.2 ஏக்கர் நிலம், தேவசம் போர்டுக்கு உள்ளது. இதில், சன்னிதானம் அமைந்துள்ள, 13.5 ஏக்கர், அரசு பட்டாவாக வழங்கிய, 50 ஏக்கர், மாளிகைப்புறம் கோவிலுக்கு வழங்கப்பட்ட, 4.7 ஏக்கர் நிலம் அடங்கும். ஆனால், இந்த இடங்களில் கூட கட்டுமான பணிகள் மேற்கொள்ள, வனத்துறை தடையாக இருந்து வருகிறது. இப்பிரச்னையில், நில அளவை நடத்தி, எல்லை நிர்ணயம் செய்ய, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட இழுபறிக்கு பின், 19ம் ேதி, வனத்துறை, தேவசம் போர்டு, வருவாய், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் முன்னிையில், சர்வே பணி துவங்குகிறது. ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.