பதிவு செய்த நாள்
24
பிப்
2018
02:02
ஓசூர்: கெலமங்கலம் அருகே, நாகமுனேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த, ஜெக்கேரி அருகே ஒன்ன குறுக்கி கிராமத்தில், நாகமுனேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. தேர்த்திருவிழா கடந்த, 22ல் துவங்கியது. (பிப்.23) மதியம், 12:15 மணிக்கு பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலை அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். (பிப்.24) காலை, 11:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமி அபிஷேகம், பூ அலங்கார சேவை, இரவு, 7:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.