நத்தம் காந்திநகரில் மலையாளத்து கருப்பு மற்றும் மந்தையம்மன் கோயில் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2018 02:02
நத்தம்: நத்தம் காந்திநகரில் மலையாளத்து கருப்பு மற்றும் மந்தையம்மன் கோயில் திருவிழா நடந்தது.
மதுரை அழகர் கோயில், சந்தனக்கருப்பு கோயிலில் இருந்து தீர்த்தம் அழைக்கப்பட்ட பிறகு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். நல்லாகுளத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி கோயிலை அடைந்தது. பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், கிடா வெட்டு, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.