பதிவு செய்த நாள்
26
பிப்
2018
04:02
கிருஷ்ணராயபுரம் : காரைக்குடி கிராமத்தில், பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி பஞ்., காரைக்குடி கிராமத்தில், பால விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கடந்த, 24ல், காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து, கும்பாபிஷேக விழாவிற்கான சிறப்பு யாக வேள்வி பூஜைகள் துவங்கின. அதன்பின், (பிப்.25) காலை, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சிவச்சாரியர் ராம ரத்தினம் தலைமையில், கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.