பதிவு செய்த நாள்
02
மார்
2018
11:03
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் ரணபலி முருகன் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் மாசி மகோற்ஸவ திருவிழா பிப்., 18 ல் துவங்கியது. பிப்., 19 ல் அனுக்ஞை, காப்புக்கட்டு, ரக் ஷாபந்தனம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி பல்லக்கிலும், இரவு அன்ன, மேஷ, பூத,கைலாச, யானை, குதிரை, மயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்,நேற்று காலை 9:30 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். பகல் 12.20 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இரவு கேடய நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மார்ச் 2 ல் காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் வி.மகேந்திரன், சரக பொறுப்பாளர் எம்.ராமு ஆகியோர் செய்திருந்தனர்.