Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் ... மதுரை அழகர்கோவில் தெப்பத்திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மகம் திருவிழா கோலாகலம்: குடந்தையில் புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2018
01:03

தஞ்சாவூர்: மாசிமக திருவிழாவை ஒட்டி, கும்பகோணம் மகாமக குளத்தில், நேற்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். மாசிமக விழாவான நேற்று காலை, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் உட்பட, 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் புறப்பாடாகி, ரிஷப வாகனங்களில், மகாமக குளக்கரையில் எழுந்தருளினர். தொடர்ந்து, அந்தந்த கோவிலின் அஸ்திர தேவர்களுக்கு, 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடந்த போது, பொதுமக்களை குளத்துக்குள் விடமால், போலீசார் கேட்டுகளை பூட்டினர்.

வாக்குவாதம் : தீர்த்த வாரிக்காக, நாகேஸ்வரர் கோவில் பஞ்சமூர்த்திகளை, குளத்தின் வடகரையில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் வைப்பதற்காக, பணியாளர்கள் எடுத்து வந்தனர். காசி விஸ்வநாதர் கோவில் பஞ்சமூர்த்திகளை மட்டும் தான், தீர்த்தவாரி மண்டபத்தில் வைப்பது வழக்கம். நாகேஸ்வர சுவாமியை, காசிவிஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தினர் அனுமதிக்காததால், நாகேஸ்வரர் சுவாமியை வீதியிலேயே நிறுத்தி, இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அறநிலைய அதிகாரிகள், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஆனாலும், நாகேஸ்வரர் சுவாமியை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததால், வேறு வழியின்றி அனுமதித்தனர். இதனால், 30 நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி : புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில், மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. செஞ்சி அரங்கநாதர், மயிலம் சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன், மணக்குள விநாயகர் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட சுவாமிகள், மேள, தாளத்துடன் ஊர்வலமாக வந்து, வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளி, புனித நீராடினர். தீர்த்தாரி முடிந்து, கடற்கரையில் வரிசையாக, பக்தர்கள் தரிசனத்திற்காக, சுவாமிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாசி மகத்தையொட்டி, கடற்கரையில் ஏராளமானோர், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar