பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
கரூர்: வெங்கடரமணசுவாமி கோவில், மாசிமக தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலில், கடந்த, 21ல் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், பல்வேறு வாகனங்களில், நம்பெருமாள் வீதி உலா வந்தார். 27ல், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று கல்யாணவெங்கடரமணசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன், தேரில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். தேரோட்டத்தை, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஆர்.ஓ., சூரியபிரகாஷ் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். அதன் பின்னர், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிந்தா! கோவிந்தா! என, கோஷமிட்டு தேரை இழுத்துச் சென்றனர். தேரோடும் வீதிகளில், தேர் சுற்றி வந்தது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு, நாளை கோவில் முன்புறம் உள்ள தெப்பக்குளத்தில், சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.