அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்துள்ள, வெஞ்சமான்கூடலூரில், மாசி மக விழாவை முன்னிட்டு, கல்யாண விகிதீஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தார். பின்னர், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள், தேரை கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். பின், தேர் நிலை நிறுத்தப்பட்டது.