பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
திருத்தணி படவேட்டம்மன் கோவிலில், மாசி பவுர்ணமியையொட்டி, நேற்று, குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். திருத்தணி, மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், நேற்று, மாசி பவுர்ணமியையொட்டி, காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், 108 பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜைகள் நடத்தி வழிபட்டனர். உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், மாசி பவுர்ணமியையொட்டி, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், 108 கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.