Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் வடம் பிடித்த கோவில் ... தன்னாசியப்பன் கோவிலில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தராஜூலு சுவாமி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2018
02:03

கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி கோவிந்தராஜூலு சுவாமி கோவிலில், நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ராஜூமலையில் உள்ள கோவிந்தராஜூலு சுவாமி கோவில், 44ஆம் ஆண்டு திருக்கல்யாண பிரமோற்சவம், கடந்த மாதம், 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 27ல் கருட வாகன உற்சவமும், 28ல் சேஷ வாகன உற்சவமும் நடந்தது. நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு, காலை, 11:00 மணிக்கு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மேள தாளம் முழங்க சீர்வரிசைகளுடன் கோவிலுக்கு ஊர்வலாக சென்றனர்.

பின் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், மாப்பிளை வீட்டாராக வெங்கடபதி நாயுடு குடும்பத்தினரும், பெண் வீட்டாராக நாராயணன் - பத்மாவதி குடும்பத்தினரும் செயல்பட்டு, திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாணம் முடிந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜூலு சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு, 7:00 மணிக்கு, யானை வாகன உற்சவமும், நாளை இரவு, 12:00 மணிக்கு வாண வேடிக்கையும் நடக்க உள்ளது. 4 காலை, 9:00 மணிக்கு, வசந்த உற்சவமும், அன்னதானமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள் மற்றும் கங்கானதாரர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar