பதிவு செய்த நாள்
02
மார்
2018
02:03
சென்னிமலை: சென்னிமலையில், மலை மீதுள்ள முருகன் கோவில் பின்புறம், சித்தர் லாடகுரு அய்யன் தன்னாசியப்பன் கோவில் உள்ளது. இங்கு, 13வது ஆண்டு மாசி திருவிழா, பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி பக்தர்கள், புனித தீர்த்தம் சுமந்து, மலைக் கோவில் படிக்கட்டுகள் வழியாக, முருகன் கோவிலுக்கு வந்தனர். அங்கு முருகனுக்கு பூஜை செய்தபின், தன்னாசியப்பன் கோவிலுக்கு, தீர்த்தக் குடங்களுடன் சென்றனர். அங்கு யாக சாலை அமைத்து, மழை வேண்டி, உலக அமைதிக்காக யாக பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பின்னாக்கு சித்தர், சரவணமா முனிவர் மற்றும் தன்னாசியப்பர் சித்தர் சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.