திருப்பூர்: அவிநாசியிலுள்ள ஸ்ரீ காரணப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா மற்றும் கவ்வாள திருவிழா கோலாகலமாக நடந்தது.அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் அருகிலுள்ள ஸ்ரீ காரணப்பெருமாள் கோவிலில், மாசி மகம் தேர் மற்றும் கவ்வாள திருவிழா, கடந்த, 23ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. 28ம் தேதி, சுவாமி திருக்கல்யாண உற்சவமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது. நேற்று, முக்கிய நிகழ்ச்சியான கவ்வாள உற்சவம் நடந்தது. தொடர்ந்து, பெருமாள், தண்ணீர் சேவை, பந்தம் சேவை சாதித்து, கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.