பதிவு செய்த நாள்
03
மார்
2018
12:03
ஈரோடு: ஈரோட்டில், ஹோலி பண்டிகையை, வட மாநில மக்கள், நேற்று உற்சாகமாக கொண்டாடினர். குறிப்பாக வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும், திருநகர் காலனி, இந்திரா நகர், அக்ரஹார வீதி, காரை வாய்க்கால், ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், கீரைக்கார வீதி, தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஹோலி உற்சாகம் கரைபுரண்டது. முன்னதாக, கோவில்களில் வழிபாடு செய்த அவர்கள், பெற்றோர், பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். இனிப்பு வகைகளை, நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்து, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அதை தொடர்ந்து, பெரிய பாத்திரங்களில் வண்ண பொடிகளை தண்ணீரில் கலந்து, ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும், வண்ண பொடிகளை முகத்தில் பூசியும், முதியவர், சிறியவர், இளைஞரென, பாரபட்சமின்றி, கொண்டாடினர். ஹோலி பண்டிகையால், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், சத்தி ரோட்டில் உள்ள, மஞ்சள் மண்டிகளுக்கு, விடுமுறை விடப்பட்டன.