மதுரை : மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்மன் சன்னதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழமை வாய்ந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன்ஒரு பகுதியாக கோவில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கடைகள் முற்றிலுமாக காலிசெய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடை விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.