பதிவு செய்த நாள்
03
மார்
2018
01:03
ஆனைமலை: ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று (மார்.,3ல்) நடைபெற்றது. ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா பிப்., 14ம் தேதி, 104 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடப்பட்டு துவங்கப்பட்டது. மார்.,2 காலை, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் அலங்கார பெரிய திருத்தேரை வடம் பிடித்தனர். இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, 3ம் தேதி காலை, 8:00 மணிக்கு, கங்கணம் கட்டி, விரதம் இருந்த பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 4ம் தேதி திருத்தேர் நிலை நிறுத்தம், மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.