பதிவு செய்த நாள்
03
மார்
2018
01:03
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள, தாமரைக்குளம் ராமர் கோவில், திருக்குட நன்னீராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.பொள்ளாச்சி தாமரைக்குளம், உப்புக்குத்தி ஓடை அருகே, ராமர் (கருடபெருமாள்) கோவில் உள்ளது. மிகப்பழமையான இக்கோவிலில் கடந்த, 2004ல் கும்பாபிேஷம் நடந்தது.தற்போது, 12 ஆண்டுகளுக்கு பின், கோவில் திருப்பணிகள் நிறைடைந்து நேற்று முன்தினம் காலை, யாக பூஜைகளுடன், சின்னத்தொட்டிபாளையம் அருள்முருக அடிகளார் முன்னிலையில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, மகா அபிேஷகம், அலங்கார பூஜை, தசதரிசனத்துக்கு பின், அன்னதானம் நடந்தது. பொதுமக்கள் பங்கேற்று ராமபிரானை வழிபட்டனர்.