நாதம் என்றால் பாட்டு; இறைவனை உளமுருக பாடி வணங்குவதே மிகவும் உயர்ந்தது என, பக்தி நுால்கள் குறிப்பிடுகின்றன. அவ்வகையில், பாடி வணங்க, உயர்ந்த ஸ்தலங்கள் இந்தியாவில் ஐந்து உள்ளன. அவற்றை, பஞ்சநாத ஸ்தலங்கள் என்று அழைக்கின்றனர். அவை, விஸ்வநாதம், சோமநாதம், வைத்தியநாதம், ஜகந்நாதம் மற்றும் ராமநாதம். இந்த சிவஸ்தலங்களில், ராமநாதம் என்பது, ராமேஸ்வரமாகும்; மற்றவை உத்தரபிரதேசத்தில் உள்ளன.