பதிவு செய்த நாள்
06
மார்
2018
12:03
ஊத்துக்கோட்டை, கால பைரவர் கோவில் சன்னதியில், சங்கடஹர சதுர்த்தி விழாவை ஒட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில், பழமை வாய்ந்த மகா கால பைரவர் கோவில் உள்ளது. இங்கு, சங்கடஹர சதுர்த்தி, வளர்பிறை மற்றும் தேய்பிறை, அஷ்டமி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று, சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, கோவில் வளாகத்தில் உள்ள கணபதிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். இதே போல், சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வரசித்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது; மகா தீபாராதனை காட்டப்பட்டது.